/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒதியம்பட்டு கோவிலை தினமும் வலம் வரும் நாய்
/
ஒதியம்பட்டு கோவிலை தினமும் வலம் வரும் நாய்
ADDED : ஜூலை 21, 2025 05:07 AM

வில்லியனுார் :   ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் கோவில் பிரகாரத்தை தினமும் வலம் வரும் நாயின் செயல் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சென்று வழிபட்டால் காசிக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோவில் பிரகாரத்தை கருப்பு நிற பெண் நாய் ஒன்று, கடந்த 21 நாட்களாக தினமும் காலை முதல் இரவு வரை ஓய்வு எடுக்காமல் சுற்றி வருகிறது. இத்தகவலறிந்த சுற்றுப் பகுதி மக்கள், கோவிலுக்கு வந்து சுற்றி வரும் நாயை ஆச்சரியத்துடன் பார்த்து, காலபைரவர் சித்தராக வந்துள்ளதாக கூறி, வணங்கி சென்றனர்.

