ADDED : ஜன 26, 2026 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, திலாஸ்பேட்டை தீமிதி திடலில் திருவாசகம் முற்றோதல் நிகழ் ச்சி நேற்று நடந்தது. அதில் சதாசிவ பரபிரம்ம திருவாசக சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், தாமோதரன் கலந்துகொண்டு திருவாசகம் பதிகம் பாடினார்.
இதில் சிவனடியார்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை முத்துமாரியம்மன் கோவில் மகளிர் திருவாசகம் முற்றோதுதல் குழுவினர் செய்திருந்தனர்.

