ADDED : செப் 17, 2026 08:45 PM
புதுச்சேரி: மத்திய அரசின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் ஓர் அங்கமான துாய்மை திருவிழா-2026 புதுச்சேரி பாரதி பூங்காவில் நேற்று துவங்கியது.
உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆதர்ஷ் தலைமை தாங்கி, துாய்மை திருவிழாவை துவக்கி வைத்தார். புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீஜித் முன்னிலை வகித்தார். விழாவில், செயற்பொறியாளர் சிவபாலன், நகராட்சி சுகாதார அதிகாரி ஆர்த்தி, கணக்கு பட்டுவாடா அதிகாரி யுவராஜ், வருவாய் பிரிவு அதிகாரி பிரபாகரன், உதவி பொறியாளர்கள் பழனிராஜா, நமச்சிவாயம், இளநிலை பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவசுப்ரமணியம், சண்முகசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஊழியர்கள், பொறியியல் பிரிவு ஊழியர்கள், கிரீன் வாரியர் நிறுவனத்தின் சுகாதார ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டு துாய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த துாய்மை திருவிழா வரும் அக்டோபர் 17ம் தேதி வரை நடக்கிறது.
