தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'உங்கள் பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்': பல்கலை மாணவர் கலந்துரையாடல் 

'உங்கள் பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்': பல்கலை மாணவர் கலந்துரையாடல் 

'உங்கள் பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்': பல்கலை மாணவர் கலந்துரையாடல் 


UPDATED : செப் 17, 2026 08:54 PM

ADDED : செப் 17, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 08:54 PM ADDED : செப் 17, 2026 08:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் சேவா சங்கல்ப் அபியான் திட்டத்தின் கீழ், 'உங்கள் பிரதமரை அறிந்து கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு வரவேற்று பேசுகையில், 'பொறுப்புணர்வு மிக்க குடிமக்களையும், அறிவு உருவாக்குநர்களையும் உருவாக்குவதில் சேவா மற்றும் சங்கல்ப் முக்கியத்துவம் அளிக்கிறது. விக்யான் தாரா மற்றும் பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை போன்ற முயற்சிகள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையை முன்னெடுத்துச் செல்கிறது.

மாணவர்களின் ஒவ்வொரு சேவைச் செயல்படும் விக்சித் பாரத் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு வலுசேர்க்கும்' என்றார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நமது தாயின் நினைவாக ஒரு மரம் நடுவது (ஏக் பேட் மா கே நாம்) திட்டத்தின் கவர்னர் கைலாஷ்நாதன், பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து, மாணவர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் மாற்றத்தக்க தாக்கம் மற்றும் 'விக்சித் பாரத் 2047' தொலைநோக்குப் பார்வையை மையமாகக் கொண்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும், நிகழ்ச்சி முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக டீன்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us