/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் அருகே 'பேய் டேங்க்' ஒரு வருடமாக பூட்டிக்கிடக்கிறது
/
வில்லியனுார் அருகே 'பேய் டேங்க்' ஒரு வருடமாக பூட்டிக்கிடக்கிறது
வில்லியனுார் அருகே 'பேய் டேங்க்' ஒரு வருடமாக பூட்டிக்கிடக்கிறது
வில்லியனுார் அருகே 'பேய் டேங்க்' ஒரு வருடமாக பூட்டிக்கிடக்கிறது
ADDED : ஜன 12, 2025 07:05 AM

வில்லியனுார்: அரியூரில் மேல்நிலை குடிநீர் டேங்கில் ஊழியர் தற்கொலை செய்து கொண்டதால், 'பேய் டேங்க்' என ஊழியர்கள் வேலை செய்ய முன்வரவில்லை. இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த குடிநீர் டேங்க் ஒரு வருடமாக பூட்டிக்கிடக்கிறது.
புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், வில்லியனுார் அடுத்த அரியூர் (தெற்கு) மேம்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டத்தின் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மற்றும் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் சம்பு ஆகியவை அமைத்தனர்.
இந்த டேங்க் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திறந்துவைத்தார். அன்றே, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் டேங்க் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், அரியூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்தாண்டு குடிநீர் டேங்க் ஆபரேட்டராக இருந்த சிவாரந்தகம் கிராமத்தை சேர்ந்த செல்வம், டேங்கில் துாக்குப்போட்டு, தற்கொலை செய்து கொண்டார். அன்று முதல் பணிபுரிய ஊழியர்கள் யாரும் முன்வராததால், டேங்கை பூட்டியே வைத்துள்ளனர். இதனால் குடிநீர் டேங்க் பகுதி செடி கொடி, புதர் மண்டி, 'பேய்' டேங்காக மாறிவிட்டது.
இது குறித்து கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் திருநாவுக்கரசிடம் கேட்டபோது, சிவராந்தகம் சாலை பகுதியில் உள்ள குடிநீர் சம்பில் இருந்து நேரடி இணைப்பு கொடுத்து அரியூர் கிராம மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கி வருகிறோம். பூட்டி வைத்துள்ள குடிநீர் டேங்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

