/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'சொல்லாததையும் அரசு செய்துள்ளது'
/
'சொல்லாததையும் அரசு செய்துள்ளது'
ADDED : ஜன 23, 2025 05:22 AM
அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பெருமிதம்
புதுச்சேரி: தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் அரசு செய்துள்ளது என, அமைச்சர் தேனி ஜெயக்குமார் கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் நஷ்டத்தை ஈடு செய்ய மழை நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 12 ஆயிரம் வீதம் அளிக்கப்பட்டுள்ளது. மாகி தவிர்த்து, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் விவசாயிகள் 13 ஆயிரம் பேருக்கு ரூ. 24 கோடி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. வாழை முதல் நெல், கரும்பு என அனைத்து விவசாய பயிர்களுக்கும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த காங்., ஆட்சியில் விவசாயிகள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு ரூ. 13 கோடி மின்துறைக்கு அளித்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் செய்துள்ளோம். மகளிருக்கு மாதம் ரூ. 1,000 தரும் திட்டம் தேர்தலில் அறிவிக்கவில்லை. அதனை செயல்படுத்தி உள்ளோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1500 வரை உயர்த்தி கொடுத்து உள்ளோம்.மத்திய அரசு பெஞ்சல் புயல் நிவாரணமாக நிதி ஏதும் அளிக்கவில்லை. இருந்தும் மாநில அரசு நிதியின் மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் அளித்துள்ளோம். விவசாயிகள் வரும் பருவதிற்கு உற்பத்தியை துவங்க வேண்டும் என்பதால், விரைவாக நிவாரணம் அளித்துள்ளோம். இதே இடத்தில் மீண்டும் அமரும் தகுதி எங்களுக்கு உள்ளது என, தெரிவித்தார்.

