/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்சார பஸ்சை அரசே ஏற்று நடத்த வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்
/
மின்சார பஸ்சை அரசே ஏற்று நடத்த வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்
மின்சார பஸ்சை அரசே ஏற்று நடத்த வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்
மின்சார பஸ்சை அரசே ஏற்று நடத்த வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்
ADDED : அக் 27, 2025 11:41 PM
புதுச்சேரி: மின்சார பஸ்களை அரசே ஏற்று இயக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசு முதன் முறையாக நகரப் பகுதியில் மின்சார பஸ் சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பஸ்களை, பி.ஆர்.டி.சி., ஊழியர்களை கொண்டு இயக்காமல், ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் இயக்குவது கண்டனத்துக்குரியது.
நகரின் மையத்தில் சார்ஜிங் சென்டர், பணிமனை அமைத்து 10 குளிர்சாதன பஸ்கள் உட்பட மொத்தம் 25 பஸ்கள் ரூ. 40 கோடி செலவில் வாங்கி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது ஏற்க முடியாதது.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அறிமுகப்படுத்தப்பட்ட தாழ்தள பஸ்களின் கட்டணங்களை அதிகமாக வசூலிக்க கொடுத்த நிர்பந்தம், அனைத்துப் பஸ்களிலும் கட்டண உயர்வுக்கு வழிவகுத்தது. அதேபோல், மின்சார பஸ்களை தனியார் பங்களிப்புடன் கட்டணத்தை உயர்த்தி, அதனை அனைத்து தனியார் பஸ்களுக்கும் விரிவுபடுத்தும் அவலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுபோன்றே காரைக்கால் துறைமுகம் தனியாருக்கு விற்கப்பட்டது. ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள மின்துறையை அதானிக்கு வெறும் ரூ.500 கோடி விற்பதற்கு பேரம் நடந்து கொண்டிருக்கிறது.
அதன் அடுத்த கட்டமாக போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து, மின்சார பஸ் திட்டத்தில் தனியாருக்கு பங்களிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மின்சார பஸ் இயக்கத்தின் முழு செலவையும் அரசே ஏற்று பி.ஆர்.டி.சி.,யிடம் ஒப்படைத்து மக்கள் சொத்தாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

