sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 'திருப்பாவையில் 'இன்புறுவர் எம்பாவாய்' என்பது ஆண்டாள் நாச்சியாரின் காருண்யத்தை காட்டுகிறது' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

/

 'திருப்பாவையில் 'இன்புறுவர் எம்பாவாய்' என்பது ஆண்டாள் நாச்சியாரின் காருண்யத்தை காட்டுகிறது' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

 'திருப்பாவையில் 'இன்புறுவர் எம்பாவாய்' என்பது ஆண்டாள் நாச்சியாரின் காருண்யத்தை காட்டுகிறது' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

 'திருப்பாவையில் 'இன்புறுவர் எம்பாவாய்' என்பது ஆண்டாள் நாச்சியாரின் காருண்யத்தை காட்டுகிறது' ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்


ADDED : ஜன 14, 2026 06:41 AM

Google News

ADDED : ஜன 14, 2026 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முத்தியால்பேட், ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்று வந்த திருப்பாவை உபன்யாசத்தின் இறுதி நாளான நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் செய்த உபன்யாசம்;

திருப்பாவை 29ம் நாள் பாசுரம் வரை ஆண்டாள் தன்னை ஆயர்குலப் பெண்ணாகவே வரித்துக் கொண்டு, இடைப் பேச்சும், முடை நாற்றமுமாய் அருளினாள். 30ம் பாசுரத்தில் தன்னை பெரியாழ்வாரின் திருமகளாக அடையாளம் காட்டிக் கொண்டு, 29 பாசுரங்களைத் தவறாமல் ஓதுவதால் கிடைக்கும் பலன் சொல்லும் பாசுரமாக 30வது பாசுரத்தை அருளியுள்ளாள்.

இந்த 29வது பாசுரத்தை, 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே நாமாட் செய்வோம்' என்று தெளிவான நோக்கத்தோடு அறுதியிட்டு நிறைவு செய்கின்றாள்.

'உன்றன்னோடு உற்றோமேயாவோம்' என்பது அஷ்டாக் ஷர மந்திரமான மூல மந்திரத்தில், 'பிரணவத்தையும், உனக்கே நாமாட் செய்வோம்' என்பது நாராயண சப்தத்தையும், 'மற்றை நம் காமங்கள் மாற்று' என்பது நம சப்தத்தையும் உள்ளர்த்தங்களாகக் குறிக்கின்றன. ஆக, உன்றன்னோடு உற்றோமேயாவோம் 'உனக்கே நாமாட் செய்வோம்' மற்றை நம் காமங்கள் மாற்று என்று முழு வாக்கியமும் சேர்ந்து 'ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாக் ஷர மந்திரத்தை குறிக்கிறது.

இந்தப் பாசுரத்தில், ஏழேழ் பிறவி என்பதை எண்ணிக்கையாகக் கொண்டு அர்த்தம் கொள்ளாமல் எத்தனை முறையானாலும் என்றே கொள்ள வேண்டும்.

பாசுரத்தில் மட்டுமே ஆண்டாள் நாச்சியார் தன்னை பட்டர் பிரானின் (விஷ்ணு சித்தரின்) குமாரத்தியாக வெளிப்படுத்திக் கொண்டு, தன் அருளியுள்ள திருப்பாவைப் பாசுரங்களை அனுஸந்திப்பவர்கள், எம்பெருமான் � மந் நாராயணனின் திருவருள் கிடைக்கப் பெற்று, பேரின்ப நிலையைப் பெறுவர்' என்று அருளியுள்ளாள்.

திருப்பாவையின் மற்ற 29 பாசுரங்களிலும் 'ஏலோர் எம்பாவாய்' என்று தலைக்கட்டி பாசுரங்களை முடிக்கும் ஆண்டாள் நாச்சியார் இந்த 30ம், பாசுரத்தில் மட்டும் 'இன்புறுவர் எம்பாவாய்' என்றருளியுள்ளது, ஆண்டாள் நாச்சியாரின் காருண்யத்தை வெளிப்படுத்துவதுடன், அவள் பூமிப் பிராட்டியின் அம்சமாக அவதரித்தவள் என்று அவளின் தெய்வத் தன்மையையும் உணர்த்துவதாக உள்ளது.

எம்பெருமானின் திருவருளால் இன்றுடன் திருப்பாவை அனுபவ உபன்யாசம் பாசுரப்படி திருக்கல்யாண நிகழ்வுடன் நிறைவு பெற்றது. இவ்வாறு அவர், உபன்யாசம் செய்தார்.






      Dinamalar
      Follow us