/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடந்த காங்., ஆட்சியில் ஓய்வூதிய திட்டத்தில் ஒரு பைசா கூட உயர்த்தி தரவில்லை
/
கடந்த காங்., ஆட்சியில் ஓய்வூதிய திட்டத்தில் ஒரு பைசா கூட உயர்த்தி தரவில்லை
கடந்த காங்., ஆட்சியில் ஓய்வூதிய திட்டத்தில் ஒரு பைசா கூட உயர்த்தி தரவில்லை
கடந்த காங்., ஆட்சியில் ஓய்வூதிய திட்டத்தில் ஒரு பைசா கூட உயர்த்தி தரவில்லை
ADDED : டிச 28, 2025 05:32 AM
முதல்வர் ரங்கசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி: அண்ணா திடல் விளையாட்டு மைதானம், டிரான்ஸ்பார்மர் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் திறப்பு விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;
அரசு பொறுப்பேற்ற பின், பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட, நிதியின் மூலம், புதுச்சேரி யில் அனைத்து வசதிகளுடன் கூடிய, விளை யாட்டு திடல், துணை மின் நிலையங்கள், அடுக்கு மாடி குடியிருப்பு ஆகும். இதுமட்டுமின்றி பல பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகள் விரைவில் முடித்து திறக்கப்படும்.
அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்து வருகிறது. மத்திய அரசு நிதி உதவியோடு, புதுச்சேரி மக்கள் கேட்டுள்ள, வளர்ச்சி பணிகளை அரசு செய்து வருகிறது.
அரசு பொறுப்பேற்ற பின், முதலில், ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தது. கடந்த காலத்தில் இருந்த அரசால் ஒரு பைசா கூட உயர்த்தி கொடுக்க முடியவில்லை. முதியோர்கள், தாய்மார்கள், மாற்றுத்திறானாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி கொண்டே வருகிறது.
புதுச்சேரியில், பசியால் யாரும் இருக்க கூடாது என்பதற்காக, இலவச அரசி, கோதுமை வழங்கி வருகிறது. மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் முக்கியம். அதில் ஒன்று தான் அடுக்கு மாடி குடியிருப்பு ஆகும். மேலும், 3 இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. அது விரைவில் முடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும்.
சாலையோரங்களில் தங்கியிருப்பவர்கள், சாலை அகலப்படுத்தும் போது, அங்கு குடியிருப்பவர்கள், வீடு இல்லாதவர்களுக்கு, வீடுகள் கட்டி கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து வசதிகளும், மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் பிரதமரின் எண்ணமாகும். அதை புதுச்சேரி, நிறைவேற்றி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

