/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி
/
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி வெற்றி
ADDED : டிச 28, 2025 05:31 AM
வில்லியனுார்: இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் சார்பில் 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் புதுச்சேரி அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்ட ஆடவர்களுக்கான கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பீகார் மாநிலம் குவாலியர் நகரில் நடந்து வருகிறது.
நான்கு நாட்கள் நடந்த இந்த போட்டியில் புதுச்சேரி கிரிக்கெட் ஆசோசியேஷன் சார்பில் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர்.
முதல் நாள் போட்டியில் புதுச்சேரி அணி, முதல் இன்னிங்ஸ் 254 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய பீகார் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 180 ரன்களுக்கு சுருண்டது. 88 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய புதுச்சேரி அணி 178க்கு 7 விக்கெட் அடித்த நிலையில் டிக்ளர் செய்தனர்.
அதனை தொடர்ந்து 255 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய பீகார் அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4ம் நாள் ஆட்டம் டிராவில் முடிந்தது.
புதுச்சேரி அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை புள்ளிகளை பெற்று தொடரில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

