/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
ADDED : மார் 11, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : பொது இடத்தில் நின்று கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீசார், மூலக்குளம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது தனியார் மதுக்கடை அருகே வாலிபர் ஒருவர் பொது இடத்தில் நின்று பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். மூலக்குளம் ஜே.ஜே.,நகரை சேர்ந்த மாடசாமி, 24; என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர்.

