/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குட்டையில் மூழ்கி கொத்தனார் பலி
/
குட்டையில் மூழ்கி கொத்தனார் பலி
ADDED : அக் 16, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : காலாப்பட்டு அருகே குட்டையில் தேங்கிய நீரில் மூழ்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி முருகன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 44; கொத்தனார். குடிப்பழக்கம் உள்ள இவர், நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
நேற்று காலை புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகில் உள்ள குட்டையில் தேங்கிய நீரில் ஆறுமுகம் மூழ்கி இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.