புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்கள் தொடர தே.ஜ., கூட்டணி அரசு மீண்டும் வர வேண்டும்
புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்கள் தொடர தே.ஜ., கூட்டணி அரசு மீண்டும் வர வேண்டும்
ADDED : ஏப் 06, 2026 11:36 PM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுார் கடை வீதியில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பேசியதாவது;
மண்ணாடிப்பட்டு தொகுதியை டில்லியே ஊற்று நோக்கி கொண்டு இருகிறது. அதனால் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நமது தொகுதி வந்து பிரசாரத்தில் ஈடுபட்டு, அங்கீகாரத்தை கொடுத்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் முறையாக மண்ணாடிப்பட்டு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட போது, ஓட்டுப் பதிவிற்கு முன்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
அதனால், 8 ஆயிரம் வாக்காளர்களை நேரில் சந்திக்க முடியாவில்லை. இருந்தும் வெற்றி பெற செய்தீர்கள். இதனால் அனைத்து வளர்ச்சி திட்டங்களை கொடுத்துள்ளோம். தகுதியானவர்களுக்கு நேர்மையான முறையில் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி இருக்கும் காரணத்தால் அனைத்து திட்டங்களும் தங்கு தடையின்றி கிடைத்து கொண்டிருகிறது. புதுச்சேரியில் ஒரு திட்டம் துவங்கப்பட்டால் தமிழக எல்லையில் உள்ள மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு மறுநாளே அந்த திட்டம் கிடைக்கின்ற உத்திரவாதத்தை எம்.எல்.ஏ.,வாக நான் செய்து வருகிறேன். இனை அனைத்தும் தொடர மீண்டும் புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணி அரசு வரவேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும். என்றார்.
