/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையோர பள்ளத்தால் விபத்து அச்சம்
/
அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையோர பள்ளத்தால் விபத்து அச்சம்
அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையோர பள்ளத்தால் விபத்து அச்சம்
அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையோர பள்ளத்தால் விபத்து அச்சம்
ADDED : பிப் 10, 2025 07:07 AM

வில்லியனுார் : அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையோர பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி-வில்லியனுார் இடையே, ரெட்டியார்பாளையம், மூலகுளம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டு வந்தனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு சார்பில், புதுச்சேரி 100 அடி சாலை மேம்பாலம் பகுதியிலிருந்து அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதி வரை, புதிய பைபாஸ் சாலை அமைத்துள்ளனர்.
இதனால், புதுச்சேரிக்கு செல்லும் வாகனங்கள் இந்த புதிய பைபாஸ் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே தனியார் பள்ளி எதிரே புதிய பைபாஸ் சாலை ஓரத்தில் இருந்த மண் அகற்றப்பட்டு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பைபாஸ் சாலை வழியாக வேகமாக வரும் வாகனங்கள், முந்தி செல்ல நேரிடும் போது, சாலையோரம் உள்ள திடீர் பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள், சாலையோர பள்ளத்தை சரி செய்து, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.