/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருளில் லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானம் புதிய ைஹமாஸ் விளக்கு போட்டும் பயனில்லை கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுப்பார்களா?

ADDED : மே 15, 2025 02:33 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் ைஹமாஸ் அமைக்கும் அதேவேகத்தை, அவற்றிற்கு மின் இணைப்பு கொடுப்பதிலும் அரசு காட்ட வேண்டும்.
லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் தினமும், காலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்கிங் செல்கின்றனர். இதேபோல், நுற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களும் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இரவு நேரத்தில் ெஹலிபேடு மைதானம் வெளிச்சம் இல்லாமல் இருண்டுபோய் கிடக்கிறது. இத்தனைக்கும் இரண்டு இடங்களில் பொதுப்பணித் துறை மூலம் ைஹமாஸ் விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு மின் இணைப்பு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இது போன்ற சூழ்நிலையில், ஏர்போர்ட் நுழைவு வாயில் உள்பட 3 இடங்களில் தற்போது ைஹமாஸ் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே, அமைக்கப்பட்ட ைஹமாஸ் விளக்குகளுக்கு கடந்த ஆறு மாதமாக மின் இணைப்பு கொடுக்கப்படாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் புதிதாக அமைக்கப்படும் ைஹமாஸ் விளக்குகளுக்கு எப்போது மின் இணைப்பு கொடுப்பது, அவை எப்போது பயன்பாட்டிற்கு வருவது என, பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ெஹலிபேடு ைஹமாஸ் விளக்கிற்கு மின் இணைப்பு கொடுப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுகிறது. மின் இணைப்பு கொடுப்பதில் உழவர்கரை நகராட்சி அல்லது பொதுப்பணித்துறை பராமரிப்பதா என்பதில் பல மாதமாக குழப்பமே நீடித்து வருகிறது.
இந்த பஞ்சாயத்தினை சீக்கிரமாக அரசு முடிவுக்கு கொண்டு வந்து ெஹலிமேடு மைதானத்திற்கு வெளிச்சம் கிடைக்க செய்ய வேண்டும். லாஸ்பேட்டை ெஹலிபேடு மைதானத்தில் ைஹமாஸ் அமைக்கும் அதே வேகத்தை, அதற்கு மின் இணைப்பு கொடுப்பதிலும் அரசு காட்ட வேண்டும். இதற்கு கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.