/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடு வழியில் நின்ற அரசு பஸ் பயணிகள் அவதி
/
நடு வழியில் நின்ற அரசு பஸ் பயணிகள் அவதி
ADDED : மார் 07, 2024 01:36 AM

பாகூர் : புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தமிழக அரசு பஸ் நடுவழியில் பழுதடைந்து நின்றதால், பயணிகள் அவதிப்பட்டனர்.
புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கி நேற்று காலை 10:00 மணியளவில் தமிழக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.புதுச்சேரி - கடலுார் சாலை, முள்ளோடை சந்திப்பு அருகே சென்ற போது, திடீரென பழுதடைந்து பஸ் சாலையின் நடுவே நின்றது.
பஸ் டிரைவர் இன்ஜினில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முயன்றார். இருந்தும் சரியாகவில்லை. ஓட்டுனர், இது குறித்து பணிமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
இதையடுத்து, சாலையில் நின்ற பஸ்சை பயணிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் தள்ளி சென்று ஓரமாக நிறுத்தினர். பின், பயணிகள் சிலர் ஆட்டோக்களிலும், மற்றவர்கள் வேறு ஒரு பஸ் மூலமாகவும் கடலுாருக்கு சென்றனர். இதனால், பஸ்சில் வந்த பயணிகள் அவதிப்பட்டனர்.

