/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டாசு தொழிற்சாலையில் போலீசார் திடீர் ஆய்வு
/
பட்டாசு தொழிற்சாலையில் போலீசார் திடீர் ஆய்வு
ADDED : அக் 24, 2024 06:27 AM

திருக்கனுார்: புதுச்சேரி மேற்கு எஸ்.பி., வம்சித ரெட்டி உத்தரவின் பேரில் திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று கே.ஆர்.பாளையம் பகுதியில் இயங்கும் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, வெடிமருந்து வைக்கப்பட்டுள்ள குடோன் பகுதியில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டனர். வெளிநபர்களிடம் மொத்தமாக பட்டாசுகள் விற்பனை செய்யும் போது, அவர்களிடம் இருந்து அடையாள அட்டை நகலை பெற்று கொண்டு வழங்க வேண்டும் என உரிமையாளருக்கு போலீசார் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை நடத்துவதற்காக பெறப்பட்ட உரிமம், விற்பனை செய்தற்கான பில் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர்.

