ADDED : டிச 17, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: சங்கராபரணி ஆற்றில் மூழ்கிய 2 மாணவர்களில் ஒருவரை காப்பாற்றிய போலீஸ்காரர் மற்றும் அவரது நண்பரை பொதுமக்கள் பாராட்டினர்.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் நேற்று முன்தினம் குளித்து கொண்டிருந்த அந்தோனி, லியோ ஆதித்யன் ஆகிய பிளஸ் 1 மாணவர்கள், திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
அப்போது, கரையில் இருந்த செல்லிப்பட்டை சேர்ந்த போலீஸ்காரர் செந்தில்முருகன், அவரது நண்பர் ராஜசேகர் ஆகியோர் ஆற்றில் குதித்து, நீண்ட துாரம் நீந்தி சென்று அந்தோனி என்ற மாணவனை கரைக்கு இழுத்து வந்தனர்.
தகுந்த நேரத்தில் மாணவன் அந்தோனியை மீட்ட, இவர்களின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

