தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பல்கலை பட்டமளிப்பு விழா: ஜனாதிபதி பங்கேற்கிறார்

பல்கலை பட்டமளிப்பு விழா: ஜனாதிபதி பங்கேற்கிறார்

பல்கலை பட்டமளிப்பு விழா: ஜனாதிபதி பங்கேற்கிறார்


UPDATED : நவ 28, 2026 08:48 PM

ADDED : நவ 28, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 08:48 PM ADDED : நவ 28, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 31-வது ஆண்டுப் பட்டமளிப்பு விழாவும், அதன் நாற்பதாண்டு கல்விச் சிறப்புக் கொண்டாட்டமும் டிச., 18ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளன. பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதியும் பல்கலைக்கழகத்தின் வருகையாளருமான திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். விழாவில், 2025-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட உள்ளது.

இவ்விழாவில் பங்கேற்க, புது டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரகாஷ் பாபு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார். இத்தகவலை பல்கலைக்கழக மக்கள் தொடர்புப் பிரிவு துணைப் பதிவாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us