/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன் தேதியிட்டு ஏழாவது ஊதிய குழு அமல் அமைச்சருக்கு பேராசிரியர் சங்கத்தினர் நன்றி

ADDED : பிப் 17, 2024 04:52 AM

புதுச்சேரி,: கல்லுாரி பேராசிரியர்களுக்கு முன் தேதியிட்டு ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தியதிற்காக, அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பேராசிரியர் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் பணியாற்றும் அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கு கடந்த 2019 ஏப். 1ம் தேதி ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அரசு அமல்படுத்தியது. ஆதாவது 1.1.2016 முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கல்லுாரி பேராசிரியர்களுக்கு 1.4.2019 முதல் ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரை செயல்பாட்டில் இருந்தது.
புதுச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள் நலச் சங்கம் சார்பில் முன் தேதியிட்டு ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த கோரிக்கை விடுத்து வந்தது. அதை ஏற்று புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கும் 1.1.2016 முன் தேதியிட்டு அமல்படுத்த அரசாணை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பேராசிரியர்கள் நலச் சங்கத்தினர் பொதுச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் முதல்வர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுபோல், கவர்னர், தலைமைச் செயலர், நிதித்துறை செயலர், கல்வித்துறை செயலர் பேராசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.