sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளம் பெரிய வாய்க்கால்

/

புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளம் பெரிய வாய்க்கால்

புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளம் பெரிய வாய்க்கால்

புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளம் பெரிய வாய்க்கால்


ADDED : பிப் 02, 2025 04:05 AM

Google News

ADDED : பிப் 02, 2025 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைக்கு துர்நாற்றம் வீசும் கழிவு நீர் வாய்க்காலாக பரிதாபமாக ஓடிக்கொண்டு இருந்தாலும், புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளங்களில் பெரிய வாய்க்காலும் ஒன்று. காலனி ஆதிக்கத்தின் பிடியில் புதுச்சேரி சிக்கி இருந்ததில் இருந்தே நகரின் முக்கியமான மழைநீர் வடிகால் அமைப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது.

அக்காலத்தில் வேதபுரி என்று அழைக்கப்பட்ட புதுச்சேரி நகரம் இயல்பாகவே தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. அதன் மேற்கு பகுதியில் அந்த காலத்தில் நிறைய செம்மண் மேட்டு பகுதிகள் இருந்தன.

இந்த செம்மண் மேட்டுகளில் நிறைய வெள்ளவாரி வாய்க்கால்களும் உருவாகி கடலை நோக்கி சிறு ஆறுகள் போல் ஓடிக்கொண்டு இருந்தன. இந்த வெள்ள வாரி வாய்க்கால்கள் மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும் ஆறாக உப்பனாற்றில் கலந்தன.

மற்ற காலங்களில் சிறு நீரோடைகளாக சலசலப்புடன் ஓடிக்கொண்டு இருந்தன. இந்த ஆறு பிரான்சுவா மர்த்தேன் காலத்தில் நகரின் மைய பகுதியில் இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.

ஆனால் 1735-1741ல் துாய்மா காலத்தில் அந்த ஆறு, நகரின் மேற்கு எல்லையில் திருப்பி விடப்பட்டன. இருப்பினும் மழை நீரின் நீரோடையாக ஓடிக்கொண்டு இருந்தன. அடுத்து வந்த துய்ப்ளே காலத்தில் இந்த ஓடை நீர் லுாய் கோட்டையை சுற்றி வெட்டப்பட்ட அகழிக்குள் திருப்பிவிடப் பட்டன.

ஆனால் 1761ல் பிரிட்டிஷார் லுாய் கோட்டையை தகர்த்தபோது, கண்டுக்கொள்ளப்படாமல் கழிவு நீர் வாய்க்கலாக மாறியது. நகரின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடிய நீரோடை சின்னவாய்க்கால் என்றும், அது தெற்கில் திரும்பி ஓடியது பெரிய வாய்கால் என்றும் அழைக்க துவங்கினர். 1765ல் பாரீஸ் ஒப்பந்தத்தின்படி மீண்டும் புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் வந்தபோது பெரிய வாய்க்காலை வடக்கு பகுதியிலும் நீட்டிக்கப்பட்டது.

இருப்பினும் புதுச்சேரி 1778 லும், 1793லும் பிரிட்டிஷார் வசம் சிக்கி இருந்ததால் பகுதி பகுதியாக பெரிய வாய்க்கால் நீட்டிப்பு பணிகள் நடந்து வந்தன. ஒருவழியாக 1827ல் வடக்கு புல்வார் வரை நீட்டிக்கப்பட்டு முழுமை பெற்றது.

பெரிய வாய்க்கால், 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. பிரெஞ்சு காலனி ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட இந்த வாய்க்கால், தமிழ்ப் பகுதியையும் பிரெஞ்சுப் பகுதியையும் பிரித்தது. வாய்காலின் கிழக்கு கரையில் அமைந்த சாலை பிரெஞ்சியர் நகரத்தின் மேற்கு எல்லையாகவும் கருதப்பட்டது. அதன் காரணமாக அது வெள்ளையர் நகர ஆற்றங்கரை மேடு என்றும், வாய்க்கால் வீதி என்றும் ஆற்றங்கரை செஞ்சி சாலை என்றும் அழைக்கப்பட்டது.

அதுபோல், பெரிய வாய்க்காலின் மேற்கு கரையின் மேல் அமைந்த சாலை இந்திய நகர ஆற்றங்கரை மேடு என்றும், ஆற்றங்கரை ஆம்பூர் சாலை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

தற்போது பெரிய வாய்க்கால் ரீச்-1 மற்றும் ரீச்-2 என இரண்டு பிரிவாக பிரித்து பராமரிக்கப்படுகின்றது. ரீச்-1 பெரிய வாய்க்கால் பகுதி 1978 மீட்டர் நீளம், ரீச்-2 பெரியவாய்க்கால்-397 மீட்டர் நீளம் உள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.21 கோடியில் பெரிய வாய்க்கால் புனரமைப்பு பணிகள் துவங்கி 50 சதவீதம் முடிந்துள்ளது. பணிகள் முழுமையாக முடியும்போது, பெரிய வாய்க்கால் ஆச்சரியத்தில் விழிகளை விரிய வைக்கும்.






      Dinamalar
      Follow us