/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகாலை வரை இயங்கிய ரெஸ்டோ பார்கள் இளைஞர்கள் போராட்டத்தால் பரபரப்பு
/
அதிகாலை வரை இயங்கிய ரெஸ்டோ பார்கள் இளைஞர்கள் போராட்டத்தால் பரபரப்பு
அதிகாலை வரை இயங்கிய ரெஸ்டோ பார்கள் இளைஞர்கள் போராட்டத்தால் பரபரப்பு
அதிகாலை வரை இயங்கிய ரெஸ்டோ பார்கள் இளைஞர்கள் போராட்டத்தால் பரபரப்பு
ADDED : அக் 28, 2024 05:30 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் அதிகாலை வரை இயங்கிய ரெஸ்டோ பார்கள் முன், இளைஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு, 12:00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒயிட் டவுன் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் இயங்கும் ரெஸ்டோ பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்கி வருகின்றன.
இதனால் நள்ளிரவில் அதிக சத்தத்துடன் எழும் இசை மற்றும் மதுப்பிரியர்களின் ஆரவாரக்கூச்சலால், கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ரெஸ்டோ பார்களில், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையும் நடந்து வருவதாக பகீர் குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த நிலையில் நகரின் மையப்பகுதியான, ஒதியஞ்சாலை பகுதியில் உள்ள ரெஸ்டோ பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அதிகாலை 3:00 மணி வரை, 'பப்'கள், இசை மற்றும் மதுப்பிரியர்களின் கூச்சல்களுடன் அதிக சத்தத்துடன் இயங்கின.
இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் துாக்கமின்றி, கடும் பாதிப்பிற்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்தனர். சிலர் ரெஸ்டோ பார்கள் வாசலிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி இளைஞர்கள் ரெஸ்டோ 'பார்' பப்களுக்குள் அதிரடியாக உள்ளே நுழைந்து, அங்கு மது போதையில் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை வெளியேற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து, இளைஞர்களை சமாதானப்படுத்தினர். மேலும், ரெஸ்டோ பார்களை மூட அறிவுறுத்தி, 'பப்'களில் நடனமாடிக்கொண்டிருந்தவர்களை வெளியேற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

