/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரண்டாவது நாளாக மாணவரை தேடும் பணி தீவிரம்
/
இரண்டாவது நாளாக மாணவரை தேடும் பணி தீவிரம்
ADDED : டிச 17, 2024 05:24 AM

திருக்கனுார்: செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவரை 2வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வில்லியனுார், ஒதியம்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ஹென்றி ஹையர் துரை. இவரது மகன் லியோ ஆதித்யன், 16; பிளஸ் 1 மாணவன். இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர் அந்தோணியுடன் செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் தடுப்பணையில் இறங்கி குளித்தபோது, இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக தண்ணீரில் இறங்கி அந்தோணியை மீட்டனர். ஆனால், லியோ ஆதித்யன் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
தகவலறிந்த திருக்கனுார் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு படகு உதவியுடன் இரவு 10:30 மணி வரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், மாணவன் கிடைக்கவில்லை.
தொடர்ந்து, நேற்று 2வது நாளாக ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் லியோ ஆதித்யனை திருக்கனுார் போலீசார் டிரோன் கேமரா உதவியுடன் சங்கராபரணி ஆற்றின் நடுப்பகுதி, கரையோரங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு துறையினரும் படகு மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.