/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வராயன்மலையில் சிக்கிய வில்லியனுார் தொடர் கொள்ளையன் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

ADDED : பிப் 23, 2024 03:37 AM
வில்லியனுார்: வில்லியனுாரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பிரபல கொள்ளையனை கல்வராயன்மலையில் மடக்கி பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலமுருகன், 46; இவர் வில்லியனுார் பைபாஸ் கண்ணகிப் பள்ளி அருகே பேக்கரிவைத்துள்ளார்.
கடந்த 2ம்தேதி நள்ளிரவு பேக்கரியை உடைத்த ரூ.2 லட்சமும், மேலும் காபி கடை மற்றும் மெடிக்கல் உள்ளிட்ட மூன்று கடைகளை உடைத்து சுமார் ரூ. 3:20 லட்சம் ரொக்க பணம் கொள்ளைபோனது. வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதற்கிடையில் கடந்த 12ம்தேதி அதே நபர் மீண்டும் பாலமுருகன் பேக்கரி மற்றும் அரியூர் மெடிக்கல் கடையை உடைத்து மேலும் ரூ. 1 லட்சம் கொள்ளைடித்து சென்றார்.
அதிர்ச்சியடைந்த போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் உள்ளிட்டகளை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாலமுருகளின் பேக்கரி மற்றும் அரியூர் மெடிக்கல் கடையில் கொள்ளையடித்தது கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அங்கனுார் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அய்யப்பன், 24; என உறுதியானது.
சாதாரண உடையில் ரகசியமாக கண்காணித்த தனிப்படை போலீசார் அவரது மொபைல் போன் டவர் மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்து, கல்வராயன்மலையில் பதுங்கி இருந்த அய்யப்பனை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.