/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய நீதிக்கட்சியின் மாநில தலைவர் மறைவு
/
புதிய நீதிக்கட்சியின் மாநில தலைவர் மறைவு
ADDED : பிப் 20, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதிய நீதிக் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் பொன்னுரங்கம் மறைவிற்கு, கட்சியின் நிறுவன தலைவர் சண்முகம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தி;
பொன்னுரங்கம் மறைந்து விட்டார் என்ற தகவலை கேட்டு துயரமடைந்தேன்.புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து முதல்வர்கள், அமைச்சர்கள் உட்பட அனைத்து கட்சிகளின் நன்மதிப்பைப் பெற்றவர். மாநில தலைவராக இத்தனை ஆண்டுகளாக ஓங்கி ஒலித்த குரல் இன்று ஓய்ந்து விட்டது என்ற வேதனை தாங்க முடியவில்லை.
அவரை இழந்து துன்பத்தில் வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர், கூறியுள்ளார்.

