நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பள்ளிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வில்லியனுார் அடுத்த உறுவையாறு செல்வா நகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவரது மகள் முத்துவள்ளி 16, இவர் நெல்லித்தோப்பு கொசப்பாளையம் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
இதற்காக தினமும் வீட்டில் இருந்து மாணவர்கள் பஸ் மூலம் பள்ளிக்கு சென்று வருகிறார்.
நேற்று முன்தினம் காலை 7.45 மணிக்கு வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர் உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.