
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சேலம் சென்ற கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம், பெரியார் நகர், 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மணவாளன். இவரது மகள் வித்யா, 19; சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் இளங்கலை 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 8 ம் தேதி கல்லுாரி கட்டணம் செலுத்த சேலம் சென்ற வித்யா, அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார். மறுநாள் 9 ம் தேதி அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. தனது தங்கை மாயமானதாக வித்யாவின் சகோதரர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.