UPDATED : அக் 15, 2026 05:32 PM
ADDED : அக் 15, 2026 05:18 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கம்பிபிட்டர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள மதிக்கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் 42; கம்பி பிட்டர். குடிபழக்கம் உள்ளது. இவருக்கு கடந்த இரண்டு மாதமாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, நாட்டு மருந்து சாப்பிட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நாகராஜ் வீட்டில் நீண்ட நேரமாக படுத்து துாங்கிக்கொண்டிரு அரை குடும்பத்தினர். எழுப்பியபோது அவர் இறந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார், நாகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
