/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரவில் பெய்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது
/
இரவில் பெய்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது
இரவில் பெய்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது
இரவில் பெய்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்தது
ADDED : ஜூன் 13, 2025 03:20 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று நாட்கள் சதம் அடித்த வெயிலை தொடர்ந்து, பலத்த மழை பெய்ததால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திர நாட்களில் விட்டு, விட்டு, மழை பெய்ததால், வெயில் தெரியாமல் போனது. ஆனால், கடந்த 7, 8 மற்றும் 9ம் ஆகிய மூன்று நாட்களில் தொடர்ந்து வெயில் சதம் அடித்தது. அதனால், சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. சாலையில் அனல் காற்று வீசியதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கினர்.
அரபிக்கடலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில், மேகமூட்டத்துடன், வானம் காணப்பட்டது. தொடர்ந்து, இரவு 9:30 மணியளவில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், நேரு வீதி, பாரதி வீதி, ரங்கப்பிள்ளை வீதி, இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல், வழுதாவூர் ஆகிய முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை வரை புதுச்சேரியில் 82.8 மி.மீ., மழை பதிவாகியது. கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த திடீர் கனமழையால் நேற்று வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்திருந்தது.