/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபரிடம் கஞ்சா கேட்டு ரகளை: மூவருக்கு வலை
/
வாலிபரிடம் கஞ்சா கேட்டு ரகளை: மூவருக்கு வலை
ADDED : பிப் 05, 2024 03:43 AM
புதுச்சேரி :புதுச்சேரி முத்தியால்பேட்டை, செந்தாமரை நகர், நேரு வீதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 19; தனியார் டுடோரியல் சென்டரில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 26ம் தேதி மதியம் 2:00 மணிக்கு, தனது நண்பர்கள் தெய்வபிரதிஸ்வரன், சஞ்சய் மற்றும் ஸ்ரீசாரதி ஆகியோருடன் கடற்கரை சாலை டூப்ளக்ஸ் சிலை அருகே பாறைமீது அமர்ந்திருந்தார்.
அங்கு வந்த அடையாளம் தெரியாத மூவர், பிரேம்குமாரிடம் கஞ்சா இருக்கிறதா என கேட்டனர். அதற்கு, எனக்கு அதுபோன்ற பழக்கம் இல்லை என கூறினார்.
கஞ்சா பிடிக்க தெரியாத நீ எதற்கு இங்கு வருகிறாய் என கேட்டு பிரேம்குமாரை தாக்கினர். தட்டி கேட்க முயற்பட்டபோது, 2 பேர் பிரேம்குமார்கையைபிடித்து கொள்ள 3வது நபர் கீழே கிடந்த பீர் பாட்டிலால் தலையில் ஓங்கி அடித்து, கொலை செய்து விடுவேன் என மிரட்டினர்.
பிரேம்குமார் நண்பர்கள் அருகில் இருந்த பொதுமக்களை அழைத்துவருவதற்குள், மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். காயமடைந்த பிரேம்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து மூவரையும்தேடி வருகின்றனர்.

