ADDED : ஆக 13, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
தினமும் அதிகாலை 4:00 மணிக்கு, செங்கழுநீர் அம்மன் கோவிலில் இருந்து, கம்பீரமாக டங்... டங்... என மணி ஓசை ஒலிக்கும். அந்த மணி ஓசையைக் கேட்டதும் ஊரே விழித்துக்கொள்ளும். பெண்கள் எழுந்து, மீன்பிடிக்கச் செல்லும் தங்கள் கணவர்களுக்கு கஞ்சிக் கலயம் கட்டித் தருவா். ஆண்கள் மீன்பிடிக்க ஆழ்கடலை நோக்கிப் புறப்படுவார்கள்.
அன்றாட வாழ்க்கையைத் தொடங்கவும், அஞ்சியிருந்த மனங்களில் பயத்தைப் போக்கி விடியலை உணர்த்தவும், மீன்பிடிக்க வழிகாட்டவும் ஒலித்த அந்தத் தெய்விக மணி ஓசை, இன்றளவும் அதிகாலை 4 மணிக்கு வீராம்பட்டினத்தில் தடையின்றி ஒலித்துக்கொண்டே இருப்பது இத்தலத்தின் ஒப்பற்ற ஆன்மிகப் பாரம்பரியமாகும்.
