/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தற்காலிக பஸ் நிலையம் வரும் 18ம் தேதி முதல் செயல்படும்
/
தற்காலிக பஸ் நிலையம் வரும் 18ம் தேதி முதல் செயல்படும்
தற்காலிக பஸ் நிலையம் வரும் 18ம் தேதி முதல் செயல்படும்
தற்காலிக பஸ் நிலையம் வரும் 18ம் தேதி முதல் செயல்படும்
ADDED : மார் 15, 2024 05:58 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதற்கான மாற்று ஏற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று பி.ஆர்.டி.சி., அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அனிபால் கென்னடி, ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள், போக்குவரத்து, நகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், பி.ஆர்.டி.சி., மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் 18ம் தேதி முதல் கடலுார் மார்க்க பஸ்களை ஏ.எப்.டி., மைதானத்தில் இருந்து விழுப்புரம் மார்க்க பஸ்களை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.

