/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் பணி தடைபட்டதால் கிராம மக்கள் சாலை மறியல்
/
கோவில் பணி தடைபட்டதால் கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : பிப் 09, 2024 05:40 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே கோவில் கட்டும் பணி தடைபட்டதால், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வில்லியனுார் அடுத்த மங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இஞ்சோலை மாரியம்மன் கோவில் இருந்தது.
இந்த கோவிலை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதன் அருகே, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தனி நபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக சிமென்ட் ஷீட் கூரை போட்ட வீடு கட்டி வசித்து வருகிறார்.
அவரது வீட்டையும் இடித்து கோவில் கட்டுமான பணி துவங்க முயற்சி நடந்ததால் அவர், கோர்ட்டிற்கு சென்று தடை பெற்றார். இதனால் கோவில் கட்டுமான பணி தடைபட்டது.
ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை 8:30 மணியளவில் விழுப்புரம் - புதுச்சேரி சாலை, வடமங்கலத்தில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., வம்சித ரெட்டி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அவர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

