ADDED : ஆக 13, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரியிலிருந்து கடலுார் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ., துாரம் பயணித்தால் அரியாங்குப்பம் வரும். அங்கிருந்து கிழக்குத் திசையில் கடற்கரையை நோக்கிச் செல்லும் சாலையில் 3 கி.மீ., பயணித்தால் வீராம்பட்டினம் கிராமத்தை அடையலாம்.
பஸ் வசதி புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து வீராம்பட்டினத்திற்கு தொடர்ச்சியாக டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் பக்தர்கள் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து வருவோர் புதுச்சேரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பஸ்கள் அல்லது டாக்சி மூலம் செல்லலாம்.
கடலுார் வழியே வருவோர் புதுச்சேரி வரை செல்ல வேண்டியதில்லை அரியாங்குப்பம் நிறுத்தத்திலேயே இறங்கி, அங்கிருந்து ஆட்டோக்கள் அல்லது நகர பஸ்கள் மூலம் வீராம்பட்டினத்தை அடையலாம்.
