ADDED : செப் 28, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர், : கூலி தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்ப வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரையாம்புத்துார் அருகே உள்ள மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் 45; கூலி தொழிலாளி. இவருக்கு மீனா 40; என்ற மனைவியும், 4 பிள்ளைகளும் உள்ளனர். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த சவுந்தரராஜன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவர் கால் தவறி கீழே விழுந்து சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார்.
புகாரின் பேரில், கரையாம்புத்துார் போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசா ரித்து வருகின்றனர்.