நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்:வில்லியனுார் அருகே இளம்பெண் திடீர் என மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த மூர்த்தி நகரை சேர்ந்தவர் ஏழுமலை மகள் அம்பிகா, 19; பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் அம்பிகா மற்றும் அவரது தாய் ஆகியோர் இருந்தனர். அவரது தாய் கடைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த அம்பிகாவை காணவில்லை. இது குறித்து ஏழுமலை வில்லியனுார் போலீசில் புகார் தெரிவித்தார்.
அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அம்பிகாவை தேடி வருகின்றனர்.