/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா
/
தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா
ADDED : ஆக 29, 2025 03:25 AM

புதுச்சேரி: தீ ப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழாவில்சபாநாயகர் செல்வம், அமைச்சர் நவச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் பங்கேற்றனர்.
ஊசுடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான் பா.ஜ.,வில் மாநில துணை தலைவராக பதவி வகித்து வந்தார்.
அவர் நியமன எம்.எல்.ஏ.,வாக நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து அவர்,மக்கள் பணியாற்றும் வகையில், ஊசுடு தொகுதி, தொண்டமாந்தம் பகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம் அரசு சார்பில், அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.முன்னதாக நடந்த கணபதி ஹோமத்தில் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ.,வுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஊசுடு தொகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பா.ஜ., நிர்வாகிகள், தொகுதிமக்கள் கலந்து கொண்டனர்.