/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி
/
வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி
ADDED : மார் 04, 2026 04:48 AM

புதுச்சேரி: வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது.
இதனையொட்டி, வெளியூர்களிலிருந்து ஏராளமான சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வந்திருந்தன. மயிலம் முருகர், செஞ்சி ரங்கநாதர், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், திண்டிவனம் ஸ்ரீனிவாசபொருமாள், புதுச்சேரி மணக்குள விநாயகர், காந்தி வீதி வேதபுரீஸ்வரர், வரதராஜபொருமாள், மிஷன் வீதி காளத்தீஸ்வர், கவுசீக பாலசுப்ரமணியர், அங்காளம்மன் உட்பட 100க்கு மேற்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வந்தன.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் வைத்திக்குப்பம் கடற்கரையில் குவிந்து, கடலில் நீராடி, சுவாமியை தரிசித்தனர். பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபட்டனர்.
பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பு கருதி நகரில் முக்கிய வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.
கவர்னர் கலைாஷ்நாதன், அரசியல் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பல இடங்களின் பக்தர்களுக்கு அன்தானம் வழங்கப்பட்டது.

