/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
/
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
ADDED : ஆக 11, 2025 07:10 AM
காரைக்கால்.: காரைக்காலில் கோவில் உண்டியல் உடைத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்கால் திருநள்ளாறு சேத்துார் அக்ரஹார பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் சேத்துார் சிவன் கோவிலில் நிர்வாகியாக உள்ளார்.இவர் கண்ணாப்பூர் சாலையில் சொந்தமாக வயலின் ஸ்ரீ வேம்படி மாரியம்மன் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். கோவில் புணரமைத்து கும்பாபிஷேகம் பணி முடிக்கப்பட்டது.
கோவில் பூசாரியாக சிங்காரவேல் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் வழக்கம்போல் கோவிலை முடிய நிலையில், மறு நாள் காலை கோவிலுக்கு சென்றபோது கோவிலின் பலிபீடம் அருகே சுமார் மூன்றடி உயரத்தில் பதிக்கப்பட்டிருந்த பித்தளை செம்பு கலந்த சூலத்தை சுமார் 2 அடி அளவுக்கு அறுக்கப்பட்டும், கோவிலின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.
புகாரின் பேரில் அம்பகரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

