நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கிளியனுார் அருகே இரு இடங்களில் 10 ஆடுகளை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கிளியனுார் அடுத்த தென்கோடிப்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் மனைவி முத்தம்மாள்,45; இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வளர்மதி. இருவரும் ஆடு வளர்த்து வருகின்றனர். கடந்த 22ம் தேதி இரவு இருவரும் தங்கள் ஆடுகளை அருகில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தனர். விடியற்காலை எழுந்து வந்து பார்த்தபோது முத்தம்மாளுக்கு சொந்தமான 6 ஆடுகளும், வளர்மதிக்கு சொந்தமான 4 ஆடுகளும் திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

