ADDED : மார் 05, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மாகி பள்ளூர் பகுதியில் மகா கணபதி கோவில் உள்ளது. கடந்த 2ம் தேதி இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
மறுநாள் காலையில் கோவிலை திறந்து பார்த்த போது, உண்டியல் உடைக்கப்பட்டிருந்து. உண்டியலில் இருந்து ரூ. 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து, கோவில் நிர்வாக தலைவர் மோகன்தாசன் புகார் கொடுத்தார்.
பள்ளூர் போலீசார் வழக்குப் பதிந்து, அந்த பகுதியில் சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் கோவில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து சென்று உண்டியலை உடைத்து, பணம் திருடி சென்றது தெரியவந்துள்ளது. போலீசார் குற்றவாளியை தேடிவருகின்றனர்.

