/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு
/
பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு
ADDED : ஜன 23, 2024 04:58 AM
புதுச்சேரி, : நெல்லித்தோப்பு கோவில் கும்பாபிேஷக விழாவில் பெண்ணிடம் இருந்து ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு திருவள்ளுவர் சாலையில் உள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது.
சாரம் குண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா, 48; இவர் நேற்று கும்பாபிேஷக விழாவில் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தார்.
பின்பு, கோவில் அருகில் வழங்கிய அன்னதானம் வாங்க சென்றார். அன்னதானம் வாங்கி கொண்டு திரும்பும்போது, தனது கை பையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் பணம் மாயமாகியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக அங்கிருந்த போலீசாரிடம், சுகுணா பணம் திருடுபோனதை கூறி கதறி அழுதார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

