ADDED : பிப் 09, 2024 05:39 AM
புதுச்சேரி: காஸ் ஏஜென்சி மற்றும் பாத்திர கடை பூட்டை உடைத்து 10 லட்சம் ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் சாலையில் மாஜி அமைச்சருக்கு சொந்தமான காஸ் ஏஜென்சி அலுவலகம் உள்ளது. நேற்று காலை ஊழியர்கள் அலுவலகத்தை திறக்க வந்தனர். முன்பக்க ெஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, டிராயரில் இருந்த 9 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது.
இதுகுறித்து, காஸ் ஏஜென்சி மேலாளர் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர்.
அதே போல், ரெட்டியார்பாளையம் சாலை, மூலக்குளம் அருகே, இருந்த பாத்திரக்கடை ஒன்றின் ெஷட்டர் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 1 லட்சம் ரூபாயை திருடி சென்றனர். கடை உரிமையாளர் கொடுத்து புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

