/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரோவில் இடத்தில் மரங்கள் திருட்டு
/
ஆரோவில் இடத்தில் மரங்கள் திருட்டு
ADDED : பிப் 19, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : ஆரோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம், பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டர் பின்புறம் உள்ளது. இங்கு ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன.
கடந்த 12ம் தேதி ஆரோவில் அறக்கட்டளை நிலக்குழுவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அங்கு சென்று பார்த்தபோது, நிலத்தில் வளர்ந்திருந்த மரங்களை, புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த திரிபுரசுந்தரி என்பவர் வெட்டி சென்றது தெரிய வந்தது.
புகாரின்பேரில், அத்துமீறி மரங்களை வெட்டிதயாக திரிபுரசுந்தரி மீது, ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

