/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை
/
வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை
ADDED : ஆக 14, 2025 06:39 AM

புதுச்சேரி,: குருவப்பநாயக்கன்பாளையம் செல்லமுத்துமாரியம்மன் கோவில் வாராகி அம்மனுக்கு, தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது.
வில்லியனுார், அரும்பார்த்தபுரம் அடுத்த ஜி.என்.பாளையம் செல்ல முத்து மாரியம்மன் கோவிலில் வாராகி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு, ஆடி மாத தேய்பிறை பஞ்சமியான நேற்று செல்ல முத்து மாரியம்மன், வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதி சிறப்பு பூஜைகள் நடந்தது. கிராம மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வாராகியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.