/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திரவுபதியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
/
திரவுபதியம்மன் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED : ஜூன் 15, 2025 11:46 PM

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் தீமிதியை முன்னிட்டு, கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
மண்ணாடிப்பட்டு தொகுதி, காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு காலை சிறப்பு அபிேஷகம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.
முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் கடந்த 13ம் தேதி நடந்தது.
நேற்று முன்தினம் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.
இதில், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட திரளான பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தீமிதி உற்சவம் நிறைவாக நேற்று தருமர் பட்டாபிேஷகம் மற்றும் சுவாமி உள்புறப்பாடு நடந்தது.