/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்தேரி வாய்க்காலில் தடுப்புச்சுவர் இல்லாததால் பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் விபத்து அபாயம்
/
சித்தேரி வாய்க்காலில் தடுப்புச்சுவர் இல்லாததால் பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் விபத்து அபாயம்
சித்தேரி வாய்க்காலில் தடுப்புச்சுவர் இல்லாததால் பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் விபத்து அபாயம்
சித்தேரி வாய்க்காலில் தடுப்புச்சுவர் இல்லாததால் பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் விபத்து அபாயம்
ADDED : அக் 19, 2025 11:59 PM

பாகூர்: பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் உள்ள சித்தேரி வாய்க்காலில், தடுப்பு சுவர் இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது.
குருவிநத்தம் தென்பெண்ணையாறு சித்தேரி அணைக்கட்டில் இருந்து துவங்கும் சித்தேரி வாய்க்கால், பாகூர் - கன்னியக்கோவில் சாலையில் உள்ள மணப்பட்டு ஏரியில் முடிவடைகிறது.
சுமார் 4 கி.மீ., துாரம் கொண்ட இந்த வாய்க்கால் சாலையையொட்டியே செல்கிறது.
இந்த சாலை குறுகலாக இருப்பதாலும், மற்றொருபுறம், வாய்க்கால் செல்வதாலும், எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு, வழி விட போதுமான இடம் இல்லாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவதால், சித்தேரி வாய்க்காலில், தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில், முதற்கட்டமாக பாகூர் மாஞ்சாலை பிள்ளையார் கோவில் சந்திப்பு முதல் குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு வரையில், சித்தேரி வாய்க்கால் ஓரமாக ரூ.42.49 லட்சம் செலவில் பாதுகாப்பு இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால், பாகூர் துாக்குபாலம் முதல் மணப்பட்டு ஏரி வரையில் உள்ள வாயக்காலில் பாதுகாப்பு தடுப்பு அமைக்காததால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் திறந்த வெளியாக உள்ள வாய்க்காலில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவி வருகிறது.
தற்போது, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் செல்லும் வெளியூர் வாகனங்கள் அதிகளவில், கன்னியக்கோவில் - பாகூர் சாலையை பயன்படுத்தி வருவதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட ஒதுங்கும் போது, வாய்க்காலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வருகிறது.
எனவே, பாகூர் - கன்னி யக்கோவில் சாலையில் உள்ள சித்தேரி வாய்க்காலில், பாதுகாப்பு தடுப்பு அமைத்திட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.