/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்றில் நீர் நாயை பார்க்க மக்கள் கூடியதால் பரபரப்பு
/
ஆற்றில் நீர் நாயை பார்க்க மக்கள் கூடியதால் பரபரப்பு
ஆற்றில் நீர் நாயை பார்க்க மக்கள் கூடியதால் பரபரப்பு
ஆற்றில் நீர் நாயை பார்க்க மக்கள் கூடியதால் பரபரப்பு
ADDED : டிச 22, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : ஆற்றில் வந்த நீர் நாயை பார்க்க, கூட்டம் கூடியததால் பரபரப்பு ஏற்பட்டது.
நோணாங்குப்பம் ஆற்றில் வெள்ளத்திற்கு பிறகு, கடந்த 4 நாட்களுக்கு முன், ஒருவர் மீன் பிடித்த போது, வலையில் 20 கிலோ எடையுள்ள கெண்டை மீன் சிக்கியது. இந்நிலையில், நேற்று மதியம் ஆற்றில் நீர் நாய் ஒன்று ஆற்றில் நீந்தி வந்தது.பொதுமக்கள் மற்றும் படகு குழாமிற்கு படகு சவாரி செய்ய வந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் பழைய நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் இருந்து நீர்நாயை பார்த்தனர். மக்களை பார்த்த நீர் நாய், தண்ணீரில் மூழ்கி, அங்கிருந்து கடற்கரை நோக்கி சென்றது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.