/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரியே இல்லை... மண்ணாடிப்பட்டில் கோலோச்சும் அமைச்சர்
/
கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரியே இல்லை... மண்ணாடிப்பட்டில் கோலோச்சும் அமைச்சர்
கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரியே இல்லை... மண்ணாடிப்பட்டில் கோலோச்சும் அமைச்சர்
கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரியே இல்லை... மண்ணாடிப்பட்டில் கோலோச்சும் அமைச்சர்
ADDED : நவ 23, 2025 05:28 AM
புதுச்சேரியில், சட்டசபை தேர்தல் களை கட்ட துவங்கி விட்டது. அனைத்து தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பணியை துவங்கியுள்ளனர்.
சில தொகுதிகளில் ஒரே கட்சியிலேயே பலரும் தான்தான் வேட்பாளர் என, அதகளப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், மண்ணாடிப்பட்டு தொகுதியில் மட்டும் தேர்தலுக்கான அறிகுறியே தென்பட வில்லை. தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் நமச்சிவாயம் மட்டும், தினம் தினம் வலம் வந்து கொண்டுள்ளார்.
கடந்த தேர்தலில், இத்தொகுதியில் வெற்றி பெற்ற நமச்சிவாயம், கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிலும், குறிப்பாக அவரது சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் எதிர்க்கட்சி வேட்பாளரை விட ஆயிரம் ஓட்டுகள் குறைவாக பெற்றார்.
சுதாரித்து கொண்ட அமைச்சர் நமச்சிவாயம், வீட்டையே தொகுதிக்கு மாற்றி, தினமும் தொகுதியை வலம் வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.
அனைத்திற்கும் மேலாக, எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்திட தனது ஆதரவாளர்களுக்கு நிகராக, எதிர்கட்சியான தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளுக்கு வருவாய் கொழிக்கும் 'ரெஸ்டோ பார்' உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மறைமுகமாக வாரி வழங்கி, தொகுதியில் எதிரியே இல்லாத நிலையை உருவாக்கி வைத்துள்ளார்.
இதன் காரணமாகவே, மாநிலத்தில் பிற தொகுதிகளில் தேர்தல் பணி அதகளப்படும் நிலையில், மண்ணாடிப்பட்டு தொகுதியில் மட்டும் பா.ஜ.,வை தவிர்த்த வேறு கட்சிகள் இல்லையா என, கேட்கும் அளவிற்கு பிறகட்சி நிர்வாகிகள் மவுனம் காத்து வருகின்றனர்.

