/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் புலம்பும் போக்குவரத்து போலீசார்
/
ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் புலம்பும் போக்குவரத்து போலீசார்
ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் புலம்பும் போக்குவரத்து போலீசார்
ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் புலம்பும் போக்குவரத்து போலீசார்
ADDED : நவ 23, 2025 05:27 AM

சுற்றுலா நகரமான புதுச்சே ரியில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர். இதற்கு நடைபாதை ஆக்கிரமிப் பே முக்கிய காரணம்.
நடைபாதையில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளையே அகற்ற முடியாமல் போலீசார் விழி பிதுங்கிக் கொண்டுள்ளனர். தவிர்க்க முடியாத சூழலில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்ற முயன்றால், உடனே இந்நாள், மு ன்னாள், வருங்கால மக்கள் பிரதிநிதிகள் இதுமட்டும் தான் ஆக்கிரமிப்பா? வேறு எங்கும் இல்லையா. இது என்ன உங்க வீட்டு ரோடா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு கலங்கடித்து விடுகின்றனர்.
இந்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் அரசியவாதிகள், வாக்காளர்களை கவர்ந்திட பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கி வருகின்றனர்.
அதில், பலர் நடைபாதையில் கடை வைப்பதற்கு வசதியாக தள்ளுவண்டி, தட்டு வண்டி, சிறிய அளவிலான பெட்டி கடைகள் என, ஒவ்வொரு அரசியல் வாதியும் நுாற்று கணக்கில் வழங்கி வருகின்றனர் .
இதனால், புதுச்சேரியில் நடைபாதை கடைகள் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது. தேர்தலுக்குள், புதுச்சேரியின் பிரதான சாலைகளில் நடைபாதை ஒன்று இல்லாமல் போய்விடும் நிலை ஏற்பட்டு வருவதை கண்டு போக்குவரத்து போலீசார், நிலமையை எப்படி சமாளிக்க போகிறோம். சாலை ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கிறார்களே என, புலம்பிக் கொண்டுள்ளனர்.

